வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:43 IST)

கஞ்சா போதையில் இருந்த வாலிபரிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்!

பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள்  மாலை பள்ளி முடிந்து பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏறாமல் அங்கிருந்து அட்டகாசம் செய்தபடி குமணன்சாவடி பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவர்கள் பள்ளி மாணவிகளிடம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
 
அப்பொழுது அங்கு கஞ்சா போதையில் வந்த நபருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதையடுத்து பள்ளி மாணவர்களும் கஞ்சா போதையில் இருந்த நபரும் ஒரு கட்டத்தில் மாறி,மாறி தாக்கி கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் கைகளில் பெரிய அளவிலான கற்களை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் அங்குமிங்குமாக ஓடினார்கள் இதனை அங்கிருந்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
 
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு தினந்தோறும் அட்டகாசம் செய்வதும் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது கஞ்சா போதையில் இருந்த நபரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போலீசார் இருந்த பகுதியில் கைகளில் பெரிய கற்களோடு சாலையில் சுற்றி வந்தது பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியது மேலும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் போலீசார் உளுந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே அரசு பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை மடக்கி அதன் மேற்கூறையின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.