கட்டிடத்தை கையால் தள்ளி இடித்த எம்.எல்.ஏ! – போலீஸார் வழக்குப்பதிவு!
உத்தர பிரதேசத்தில் அரசு கல்லூரி கட்டிட சுவர்களை கையால் தள்ளி இடித்த எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் ப்ரதாப்கர் பகுதியில் புதிய அரசு கல்லூரி தொடங்குவதற்கான கட்டிட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த கட்டிடத்தை சமீபத்தில் சென்று பார்வையிட்ட சாமாஜ்வாடி எம்.எல்.ஏ ஆர்.கே வர்மா கட்டிடத்தின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கையால் தள்ளியதும் அந்த சுவர்கள் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில் அரசு சொத்தை நாசம் செய்ததாகவும், அரசுப் பணியை செய்யவிடாமல் இடையூறு செய்ததாகவும் ஆர்.கே வர்மா மற்றும் அப்பகுதிக்கு சென்ற 55 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.