வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (08:46 IST)

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய போராட்டத்தில் வன்முறை! – 136 பேர் கைது!

Islamic protest
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று நாடு முழுவதும் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்திலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

உத்தர பிரதேசத்தில் மொரதாபாத், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கற்களை போராட்டக்காரர்கள் வீசியதால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடராதிருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.