கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு அரசே காரணம்: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு அரசே காரணம்: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு
siva| Last Updated: ஞாயிறு, 16 மே 2021 (07:24 IST)
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு அரசே காரணம்: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் மூன்று லட்சத்திற்கு மேல் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதேபோல் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தவறிவிட்டது என ஏற்கனவே காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறி வரும் போது தற்போது பாஜகவின் ஆதரவு அமைப்பான ஆர்எஸ்எஸ் கட்சியும் மத்திய அரசை குற்றம் கூறியுள்ளது

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியபோது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதற்கு மக்கள் மட்டுமின்றி அரசும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மூன்றாவது அலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீது ஆர்எஸ்எஸ் தலைவரே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :