திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 மே 2021 (14:13 IST)

இந்த மாதம் இறுதிவரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம்... ஆர் கே செல்வமணி தகவல்!

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி இம்மாத இறுதி வரை தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இது சம்மந்தமாக முதலமைச்சரை சந்தித்த திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி சில கோரிக்கைகளை வைத்திருந்தார். அதுகுறித்து இப்போது பேசியுள்ள அவர் ‘முதல்வரிடம் திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கூடுதல் நிவாரணம், தனி மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் ஆகிய கோரிக்கைகள் வைத்துள்ளோம். மேலும் இம்மாதம் இறுதி வரை படப்பிடிப்புகளில் ஈடுபடமாட்டோம் ’ எனத் தெரிவித்துள்ளார்.