1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து பார்த்து வீடு கட்டுவதில் ஆர்வம் காட்டுவது ஏன்...?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற  கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.  

வாஸ்து என்பது நாம் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாம் ஒரு வீடோ, அல்லது பிற பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டும்போதோ வாஸ்து பார்த்து கட்டுவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். 
 
அப்போது தான் நாம் நினைத்தப் படி நமக்கு எல்லா நன்மைகளுடன் சேர்ந்த வாழ்க்கை அமையும். அப்படி வாஸ்துப்படி ஒரு கட்டிடம் இல்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
 
உதாரணமாக நாம் வீடு கட்டுவதற்கு வட்டிக்கு பணம் வாங்கி இருந்தோம் என்றால் வாஸ்து தவறால் அந்த கடனை நம்மால் கட்டவே முடியாது.

மேலும் அந்த  வீட்டில் உள்ளவருக்கு திருமணத்தடைகள், அப்படியே திருமணம் நடந்தாலும் அந்த திருமணத்தின் போது சொல்ல முடியாத மனக்குழப்பங்கள் ஏற்படும். மேலும்  குடும்பத்தில் தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.