திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 மே 2021 (11:17 IST)

மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா?

அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரெட்மி நோட் 10 போன் வந்தது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 மும்பையைச் சேர்ந்த அந்த வாடிக்கையாளர் கோல்கேட் நிறுவனத்தின் மவுத்வாஷ் ஒன்றை அமேசான் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த பார்சல் அவருக்கு வந்தபோது அதன் உள்ளே ரெட்மி நோட் 10 என்ற போன் இருந்துள்ளது. பார்சலின் வெளியே முகவரி மற்றும் ஆர்டரின் தகவல்கள் சரியாக இருந்துள்ளது. ஆனால் உள்ளே மவுத்வாஷுக்கு பதில் போன் இருந்துள்ளது.

மவுத்வாஷ் ரிட்டர்ன் செய்யும் பொருட்களின் பட்டியலில் இல்லாததால் அந்த ஆர்டரை அவரால் ரிட்டர்ன் செய்ய முடியவில்லை. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் அமேசான் நிறுவனத்துக்கு டேக் செய்து டிவீட் செய்துள்ளார்.