செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 மே 2021 (12:30 IST)

மே 31 வரை சூட்டிங் இல்லை - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி !

ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படபிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது.

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படபிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.