திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (12:01 IST)

2 மாதங்களுக்கு வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

 
இந்தியாவில் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரொக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டிக்குப் பெயர் ரெப்போ ரேட் ஆகும். வணிக வங்கிகள் தங்களிடம் உள்ள ரொக்கத்தை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யும்போது அதற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகும். 
 
இந்நிலையில், ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் ஏற்கெனவே உள்ளபடியே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.