வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:06 IST)

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் ஏற்கெனவே உள்ளபடியே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரொக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டிக்குப் பெயர் ரெப்போ ரேட் ஆகும். வணிக வங்கிகள் தங்களிடம் உள்ள ரொக்கத்தை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யும்போது அதற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகும். 
 
ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் ஏற்கெனவே உள்ளபடியே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  பணப்புழக்கம் எந்த அளவில் நிலவவேண்டும் என்று பணவியல் வல்லுநர்கள் முடிவு செய்கிறார்களோ, அதற்கேற்பவே இந்த வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும். 
 
பணப்புழக்கம் அதிகமானால், அது பண வீக்கத்துக்கு இட்டுச் செல்லும். பணப்புழக்கம் குறைந்தால் அது மந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில் எந்தவிதமான பணவியல் கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து, தங்கள் இலக்கை அடைவதற்கு இந்த வட்டி விகிதங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள் வல்லுநர்கள்.