1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (12:29 IST)

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி..! காவல்துறை அணிவகுப்பு மரியாதை..!

republic
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படை பிரிவின்  இறுதிக் கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்,அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
 
police
குடியரசு தின விழாவையொட்டி இன்று காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகள், முப்படைகளை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

 
மேலும் குடியரசு தினவிழாவில் வீரதீர செயல்கள் புரிந்தவர்கள், காவலர்கள், மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஒத்திகையும் நடைபெற்றது. குடியரசு தினத்தை ஒட்டி புதுச்சேரியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது