வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (14:17 IST)

ராகுல் காந்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு இரக்கம் காட்டுபவர் - பாஜக குற்றச்சாட்டு !

ராகுல் காந்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு இரக்கம் காட்டுபவர் பாஜக குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.  இதில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நினைவுதினம் இன்று அதனால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புல்வாமா தாக்குதலில் வீர தியாகம் புரிந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,தனது டுவிட்டர் பக்கத்தின் இன்று, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் தியாகத்தை நாம் அனுசரிக்கிறோம்.
 
இந்தக் தாக்குதலில் இருந்து பயனடைந்தவர்கள் யார் ? இந்த தாக்குதல் குறித்த விசாரணை எந்த முறையில் நடைபெறுகிறது. பாஜக அரசின் பாதுக்காப்பு குறைபாட்டால் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பது யார் ?  என பதிவிட்டுள்ளார்.
 
இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர்  ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியுள்ளதாவது : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு  நாட்டில் உள்ள எல்லோரும் மரியாதை செலுத்துகின்றனர். ஆனால், பயங்கரவாத அமைப்பான பஷ்கர் இ தொய்பா, மற்றும் ஜெய்ஷ் இ முகமதுக்கு இரக்கம் காட்டுபவரான ராகுல்காந்தி அரசையும், பாதுகாப்புப் படையினரை விமர்சனம் செய்து வருகிறார்.
 
மேலும் , இந்த தாக்குதல் நடத்தக் காரணமான உண்மையான குற்றவாளியை ராகுல்காந்தி கேள்வி கேட்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.