1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (16:48 IST)

டுடே.. Hug டே: மோடிக்கு காங்கிரஸ் ஸ்பெஷல் மெசேஜ்!!

ஹக் டே-வை முன்னிட்டு காங்கிரஸ் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப் பிடிக்கும் வீடியோவை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
 
வரும் 14 ஆம் தேதி காதலர்கள் தினம் என்பதால் காதலர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அதிலும் இன்று ஹக் டே.  எனவே, காங்கிரஸ் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப் பிடிக்கும் வீடியோவை பதிவிட்டு ஹக் டே வாழ்த்து தெரிவித்துள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்து, வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என கூறி மோடி கட்டியணைத்தார். இதை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. 
 
இந்நிலையில் இன்று ஹக் டே என்பதால் காங்கிரஸ் இந்த வீடியோவை பதிவிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதோ இந்த வீடியோ...