செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (19:46 IST)

பயங்கரவாத நிதி திரட்டல்.. ஹைபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை !

பயங்கரவாத நிதி திரட்டல்.. ஹைபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை

மும்பையில்  கடந்த 2008 ஆம் ஆண்டு நாம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலிக்கு முக்கிய காரணம் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு நிதி பரிமாற்றம் செய்துவருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும் அசரது அமைப்பின் உள்ள 12 பேரை கடந்த ஜீலை 17 ஆம் தேதி பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். ஹைபீஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதற்கான ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளதாக தெரிகிறது. 
 
இதுதொடர்பான வழக்கு பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுகுறித்த அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்குகள் குற்றம்சாட்டப்பட்ட ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  மேலும் அவர் இரண்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் இரண்டு வழக்குகளுக்கான தண்டனை 11 ஆண்டுகள் அவருக்கு விதிக்கப்பட்டது.