இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்.. முதலிடம் மோடி.. முதல் 10 இடங்களில் 2 தமிழர்கள்..
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்ற பட்டியலை ஆங்கில ஊடகம் ஒன்று எடுத்த நிலையில் அதில் முதலிடம் பிரதமர் மோடி அவர்களுக்கு கிடைத்துள்ளது.
பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம், உள்துறை அமைச்சர் அமைச்சர் இரண்டாவது இடம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்றாவது இடம் பெற்றுள்ளனர்
இந்த நிலையில் இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவர்.
இந்நிலையில் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்கள் பெயர் இதோ:
1. நரேந்திர மோடி, இந்திய பிரதமர்.
2. அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
3. மோகன் பக்வத், ஆர்எஸ்எஸ் தலைவர்.
4. டி.ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
5. எஸ். ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.
6. யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வர்.
7. ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர்.
8. நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.
9. ஜெ.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர்.
10. கவுதம் அதானி, தலைவர், அதானி குழுமம்.
Edited by Siva