ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (12:56 IST)

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் தெரியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது.

திமுகவைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர்.  அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்

திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி நேற்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது திமுக விரைவில் அழிந்து விடும் என்றும் காணாமல் போய்விடும் என்று ஆவேசமாக பேசினார். இதற்கு ஏற்கனவே கனிமொழி எம்பி உள்பட பலர் பதிலடி கொடுத்த நிலையில் தற்போது முதலமைச்சர் இது குறித்து தனது பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran