திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (15:02 IST)

பிரபல பாடகி சுமித்ரா சென் காலமானார்- முதல்வர் இரங்கல்

sumithra sen
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெங்காலி பாடகி சுமித்ரா சென் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெங்காலி மொழி பாடகி சுமித்ரா சென். இவர் பல ஆண்டுகளாக பெங்காலி சினிமாவில் பின்னணி பாடகியாக பணியாற்றி வந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் வரை பாடி வந்த சுமித்ரா சென், சில ஆண்டுகளுக்கு முன் மூச்சுக் குழாய்  நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  சிகிச்சை பலனளிக்காமல், வயது மூப்பு மற்றும் உடல்  நலக்குறைவால்   சுமித்ரா சென் காலமானதாகத் தகவல் வெளியாகிறது.

பழம்பெரும் பாடகி சுமித்ரா சென் மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.


மேலும், சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.