திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (11:04 IST)

போதையில் பெண் மேல் சிறுநீர் கழித்த சக பயணி! – நடுவானில் அதிர்ச்சி!

Flight
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சக பயணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துள்ளது. அதில் எக்கனாமிக் வகுப்பி பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் அந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.


இது விமானத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான பணிப்பெண்கள் அந்த பெண்ணிற்கு பைஜாமாக்கள் மற்றும் காலணி வழங்கி மீண்டும் இருக்கையில் அமர வைத்துள்ளனர். அந்த நபர் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததோடு, விமான நிலையம் வந்த பிறகும் அவரை சுதந்திரமாக செல்ல அனுமதித்துவிட்டது அந்த பெண்ணை வருத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகாரளித்த நிலையில் இந்த சம்பவத்தில் விமான நிறுவனம் ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த நபர் இனி விமானங்களில் பயணிக்க முடியாதபடி தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K