வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (11:28 IST)

”ஒரு கோடி தறேன்.. எங்கயாவது ஓடி போயிடு?” – பெண் பயிற்சியாளரை மிரட்டும் அமைச்சர்?

abuse
அரியானாவில் பெண் விளையாட்டு பயிற்சியாளரிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் அமைச்சர் சந்தீப் சிங் பெண் பயிற்சியாளரை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

அரியானா மாநில விளையாட்டு துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். சந்தீப் சிங் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக முன்னாள் தேசிய வீராங்கனையும், விளையாட்டு பயிற்சியாளருமான ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அந்த பெண் பயிற்சியாளர், தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டுமென விளையாட்டு மந்திரி தன்னை நேரில் வர சொன்னதாகவும், அவரது வீட்டில் ஒரு அறைக்கு அழைத்து சென்று தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூச்சலிட்டும் அங்கிருந்த பணியாளர்கள் யாரும் தனக்கு உதவவில்லை என்று கூறிய அவர் இதுகுறித்து சண்டிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து தனது விளையாட்டு துறையை முதல்வரிடம் ஒப்படைப்பதாக மந்திரி சந்தீப் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள பெண் பயிற்சியாளர் ‘அரியானா முதல் மந்திரி பேசுவது அமைச்சரை காப்பாற்றும் வகையில் உள்ளது. சண்டிகர் போலீஸ் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அரியானா போலீஸார் என் மீது அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு செல்போனில் மிரட்டல்கள் வருகின்றன. மாதம் ரூ.1 கோடி தருகிறோம். எந்த நாட்டிற்கு வேண்டுமென்றாலும் போ என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K