திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (13:42 IST)

பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல நடிகை...

இன்னும் சில மாதங்களில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.
முன்னாள் நடிகையும் அரசியல்வாதியும், எம்.பி.யுமான ஹேமமாலினி, மதுராவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார் அப்போது   அவர் கூறியதாவது :
 
மதுரா தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி தற்போது மதுரா இரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக இரயில்வே அதிகாரிகள் சிறப்பாக்ல ஒத்துழைத்தார்கள்.மேலும் ஆன்மிக தளமாக உள்ள மதுராவுக்கு பல இரயில்களை இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியி முடிவு செய்துள்ளேன். அதற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. இம்முறையும் மக்கள் சிறப்பான வெற்றியை தருவார்கள் என்ற நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்