திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (10:14 IST)

லுங்கியுடன் சுற்றித்திரியும் பிரபல நடிகை: வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

நடிகை அமலாபால் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
மலையாள நடிகையான அமலாபால் தமிழில் சிந்துசமவெளி, மைனா, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, சாருலதா, தலைவா, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் மட்டுமே தற்பொழுது நடித்து வருகிறார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.
டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தாம் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்ட் செய்து லுங்கிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என பதிவிட்டுள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.