1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)

சிம்புக்கு ரூ.1000 கோடி சொத்து இருக்கு... பிரபல நடிகர் பேச்சு ...

நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு தன் ரசிகர்களுக்கு தன் படம் ரிலீஸின் போது பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டார். பின்பு சில நாட்களுக்கு பின்னர் தன் படம் வெளியாகும் போது அண்டா அண்டாவாக பால் கொண்டு வந்து ஊற்றுங்கள்.. என்று மற்றொரு வீடியோ வெளியிட்டார். 
சில நாட்களுக்கு  பிறகு மீண்டும்  மற்றொரு பதிவில் தன் ரசிகர் ஒருவர் போஸ்டர் ஒட்டும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகுதான் சிம்பு தன் ரசிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் பெற்றோருக்கு வேட்டி சேலை வாங்கிக்கொடுங்கள் என்று தெரிவித்ததாக தற்போது செய்திகள் வெளியாகிறது.
 
இது சம்பந்தமாக  சிம்புவின் நண்பர் மஹத்  தனியார் சேனல் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அப்போது நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மஹத் கூறியதாவது:
 
’’சிம்பு, தன்  படம் ரிலீசாகும் போது  ரசிகர்கள் பால் ஊற்ற வேண்டாம் என்று அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள். நாங்கள் மீம்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு அதை சிம்புவிடம் கூறுவோம். அதனால் நல்ல விஷயங்களை நெகட்டிவ்வாக சொன்னாலாவது கேட்பார்கள் என்று நினைத்து தான் அந்த வீடியோவை வெளியிட்டார். அவர் பிறக்கும் போது ரூ.1000கோடி சொத்து இருந்தது. அவர் பிறக்கும் போதே கோல்டன் ஸ்பூனில்தான் பிறந்தார் ‘’. சிம்பு யார் பேச்சையும் கேட்க மாட்டார்,. அவர் அவர் பேச்சை மட்டும்தான் கேட்பார். இவ்வாறு தெரிவித்தார்.
சிம்புவின்  ரசிகர் போஸ்டர் தகராறில் இறந்தபோது அவரது வீட்டிற்குச் சென்ற சிம்பு கண்ணீர் விட்டு கதறி அழுது தன் கையால் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்.அந்த நிகழ்ச்சியை தொடர்புபடுத்திதான் சிம்பு இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகிறது.