1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (19:20 IST)

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ...நடிகை பானுப்பிரியா மீது வழக்குப் பதிவு ...

தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயினாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் தற்போது பிரபல டிவி சேனல்களில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி அந்த சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணாமாக எனது மகள் ( 14 ) சந்தியாவை திரைபட நடிகை பானுப்பிரியாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். மாதம் என் மகளூக்கு 10000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதால் நாங்கள் ஒப்புக்கொண்டு மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம். 
 
மாதாமாதம் 10,000ரூபார் சம்பளம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக மகளுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை. 
 
மேலும் எம் மகள் சந்தியாவுக்கு பானுபிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மனரீதியாகவும் பல தொல்லைகள் தந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட என் மகள் வேறு ஒருவரின் அலைபேசி மூலமாக எனக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார்.
 
இதுகுறித்து கேட்பதற்காக நான் 18 - 1 -19 அன்று பனுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உன்னால் உன்றும் செய்ய,முடியாது .. எங்களிடம் பணமும் செல்வாக்கும் உள்ளது என்று கூறி என் கழுத்தைப் பிடித்து கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டனர்.
 
எனவே இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். பிரபாதியின் ( சந்தியாவிம் அம்மா) புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீஸார் பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.