ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (07:43 IST)

நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விவசாயிகளுக்கு குரல் கொடுத்த பாப் பாடகி!

நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விவசாயிகளுக்கு குரல் கொடுத்த பாப் பாடகி!
டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஏற்கனவே சர்வதேச தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது சர்வதேச புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி மற்றும் நடிகை ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ’நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? என்று கேள்வி எழுப்பி தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் 
 
100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வைத்துள்ள பாப் பாடகி ரிஹானாவின் இந்த டுவிட் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்திய நடிகைகள் கங்கனா ரனாவத்  உள்பட பலர் விவசாயிகள் போராட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது ரிஹானாவும் தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருப்பது அடுத்து இந்த போராட்டம் உலகின் கவனத்தை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது
 
இதன் பின்னராவது இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது