1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:54 IST)

போராட்டத்தை முடக்க இப்படியா? சாலையில் ஆணிகள் பதிப்பு!

தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் சாலையில் ஆணிகள் பதித்த டெல்லி காவல்துறை.

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் எட்டப்படவில்லை.
 
இந்நிலையில் சமீப காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக டெல்லியில் பரபரப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காஸிப்புர் மற்றும் திக்ரி பகுதிகளில் இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதனிடையே தொடரும் விவசாயிகள் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி - உத்திர பிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்புகள் அமைத்து, சாலையில் ஆணிகளை பதித்துள்ளது டெல்லி காவல்துறை. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.