1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:28 IST)

அமைச்சர் தங்கமணியின் வீடு முன் போராட முயன்ற விவசாயிகள் கைது!

தமிழக அமைச்சர் தங்கமணியின் வீட்டின் முன் விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அமைச்சர் தங்கமணி நிறைவேற்றவில்லை என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனை அடுத்து அமைச்சர் தங்கமணியை கண்டித்து நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இன்று காலை திடீரென விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தச் சென்றனர் 
 
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அமைச்சரின் வீட்டிற்கு வந்து போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் விவசாயிகள் பிடிவாதமாக அமைச்சர் தங்கமணியின் வீட்டின் முன் போராட்டம் செய்ய முடிவு செய்ததை அடுத்து போராட்டம் செய்ய முயற்சித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
 
அமைச்சர் தங்கமணியின் வீட்டின் முன் போராட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது