செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (13:59 IST)

தஞ்சாவூர் பொம்மைகள், ராஜபாளையம் நாய் பெரும் உதாரணம்! – பிரதமர் மோடி பெருமிதம்!

இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் தஞ்சாவூர் பொம்மைகள் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

மாதம்தோறும் நாட்டு மக்களோடு பிரதமர் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் மோடி குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கற்று தர வேண்டும் என்றும், புதிய கல்வி கொள்கையில் பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சி குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் தஞ்சாவூரில் செய்யப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும் உலக அளவில் இந்திய பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல அனைவரும் வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதற்கு பதிலாக இந்திய நாட்டு நாய்களான ராஜபாளையம், போன்ற நாய்களை வளர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.