திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj

உகாண்டாவில் இடி தாக்கி 10 சிறார்கள் உயிரிழப்பு

உகாண்டாவின் வட மேற்கு நகரமான ஆரூவாவில் புயல் ஏற்பட்ட போது, குடிசைக்குள் தஞ்சம் புகுந்த பத்து குழந்தைகள் இடி தாக்கி உயிரிழந்தனர்.

 
கால் பந்து விளையாடி கொண்டிருந்தபோது கன மழை பெய்ததையடுத்து அருகே இருந்த கூரை குடில் போன்ற இடத்தில் அந்த சிறார்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 
அப்போது குடிசை மீது இடி தாக்கியதில் 13 முதல் 15 வயது இருக்கக் கூடிய 9 சிறார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 
இதே குடிசை பகுதியில் உயிர் தப்பிய 3 குழந்தைகளுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உகாண்டாவின் வட மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

 
2011ம் ஆண்டில் மேற்கு பிராந்தியத்தின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் இதே போல் இடி, மின்னல் தாக்கியதில், 18 சிறார்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள், மற்றொரு சம்பவத்தில் மின்னல் தாக்கியதில் 28 பேர் பலியானார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், மின்னல் தாக்கியதில் 4 மலைவாழ் கொரில்லாக்கள் உயிரிழந்தன.