செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (20:14 IST)

உயிர்களைக் காப்பாற்ற உலகமே போராடி வருகிறது – பிரதமர் மோடி உரை

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று
ஆலோசனை நடத்தினார்.

அதில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5 வது முறையாக நேற்று ஆலோசனை செய்ததாகத் தகவல் வெளியானது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு.... 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 இருந்து 70,756 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 இருந்து 22,455 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 இருந்து 2,293 ஆக உயர்ந்துள்ளது 

இந்நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என தகவல் வெளியானது .

கடந்த மே 22  ஆம் தேதி பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதையடுத்து, மார்ச் 24 ஆம்  தேதி பொது ஊரடங்கு இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மே 3 ஆம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்களாக அமலில் உள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருளாதார வருவாய் குறைவும்,  புலம் பெயர்ந்தவர்களுக்காகவும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கபட்டது.
அதேபோல் தற்போது அவர் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

அதில்,  கொரொனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போராடி வருவதை பற்றி குறிப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த உலகத்தையே கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. இதுவரை கொரோனாவால் 3 லட்சம்  உயிரிழப்பு. ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக கொரொனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது இந்தியா  உயிர்களைக் காப்பாற்ற உலகமே போராடி வருகிறது. இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் இந்தியாவில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பாதிப்புக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.  இந்தக் கொரோனா நமக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு பிறகான உலகினை இந்தியாதான் முன் நின்று வழிநடத்த வேண்டும்.  உலகில் ஏற்பட்டு வரும்  மாற்றங்களை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனோ வைரஸ் முக்கியக் கட்டத்தில் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.