1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (17:18 IST)

அமைச்சர்களை வாட்டி எடுக்கும் ஜெகன்? இந்த விஷய்ம் ரொம்ப கொடும...

விஷவாயு விபத்து பகுதியில் அமைச்சர் தங்க ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கெமிக்கல் ஆலை ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
 
நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையால் அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 
 
12 பேரை பலிகொண்ட இந்த சம்பவத்திற்கு பின் 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பாதிப்பு எச்சங்கள் இருக்க கூடும் என்பதால் ஏ.சி., சமையலறை, திறந்த வெளி நீர், கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவற்றை வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் வரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
அதோடு, அந்த பகுதியில் இரவு நேரங்களில் அமைச்சர்கள் தங்க வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.