செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (19:16 IST)

ஊரடங்கு எதிரொலி: 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மனி பயணி

55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மனி பயணி
இந்தியா வழியாக துபாய் செல்ல சென்று கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவர் இந்திய தலைநகர் டெல்லியில் துபாய் விமானத்திற்காக காத்திருந்த நிலையில் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் அந்த பயணி சிக்கித் தவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியில் ஜெர்மன் நாட்டில் இருந்து துபாய் புறப்பட்ட எட்கார்ட் ஜீபார்ட் என்பவர் டெல்லியில் இறங்கி பின்னர் அங்கிருந்து துபாய் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து ஜெர்மன் பயணியான எட்கார்ட் ஜீபார்ட் அவர்களிடம் இந்தியா விசா இல்லாததால் இந்தியாவுக்குள் நுழைய முடியாமலும், தான் செல்லவேண்டிய துபாய்க்கும் செல்ல முடியாமல் டெல்லி விமான நிலையத்தில் கடந்த 55 நாட்களாக தங்கியுள்ளார். 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெர்மனிக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்ற நிலையில் அந்த விமானத்தில் அவர் தனது தாய் நாடு சென்றார். 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே ஜெர்மன் பயணி ஒருவர் தங்கி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது