1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:44 IST)

உக்ரைனில் இருந்து ஹங்கேரி, அதன்பின் இந்தியா: மத்திய அரசு திட்டம்!

உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியா அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
குறிப்பாக உக்ரைன் எல்லையில் உள்ள ஜொகனி என்ற பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது
 
இதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஜொகனி விரைந்து உள்ளதாகவும் விரைவில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது