வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (12:47 IST)

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு

சமீபத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது என்பதும் இந்த தொடரில் பல மசோதாக்கள் இயற்றப்பட்டன என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
இந்த கூட்டத்தொடரில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் 
 
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
குறிப்பால உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கணக்கில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது