ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:02 IST)

பான் ( Pan ) கார்டு வைத்திருப்போர் ... இந்த தவற்றைச் செய்தால் ரூ 10 ஆயிரம் அபராதம் !

இன்று பான் எண் எனும் நிரந்தர கணக்கு (PAN)என் என்பது எல்லோருக்கும் கட்டாயமாகியுள்ளது. இந்திய வருமான வரித்துறையால்  வழங்கப்படும் இந்த எண் வரி செலுத்துவதற்கும், ஒருவரின் வங்கி, மற்றும் பண வரவு செலவு பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கு ஐடி துறைக்குப் பயன்படுகிறது.

குறிப்பாக வரி செலுத்துவோருக்கு இந்த எண் கட்டாயமாகும். இந்த நிலையில் ஒருவர் இரு பான் கார்டுகளை வைத்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக ஒன்றுக்கு மேல் பார் கார்டுஎனும் நிரந்தர கணக்குகள் வைத்திருந்தால் அவர்களுக்கு வருமான வரிச்சட்டம் 1961 கீழ் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் எண்ண எண்ணில் தொடர விரும்புகிறோமோ அதைக் குறிப்பிட்டு பூத்தி செய்யப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வருமான வரித்துறைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.