பாகிஸ்தானில் தயாராகும் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம்: முதல் போட்டி இந்தியா-பாகிஸ்தான்?

பாகிஸ்தானில் தயாராகும் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம்
siva| Last Updated: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:03 IST)
பாகிஸ்தானில் தயாராகும் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம்
இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி அருகே உள்ள பஹ்ரியா என்ற நகரில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் ஒன்று தயாராகி வருகிறது

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைதானம் கட்டப்பட்டு வருவதாகவும் தற்போது இந்த மைதானத்தின் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் பேர் உட்கார்ந்து ஒரே நேரத்தில் போட்டியை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் விரைவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்கனவே ஒரு கிரிக்கெட் மைதானம் இருக்கும் நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு கிரிக்கெட் மைதானம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானம் திறப்புவிழா கண்டால் பாகிஸ்தானின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான் என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்புவதாகவும், இதுகுறித்த தங்கள் எண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரைவில் பிசிசிஐக்கும் தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :