”திட்டங்களுக்கு மத்திய அரசிடம் பணம் இல்லை”.. சிதம்பரம் குற்றச்சாட்டு
முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசிடம் பணம் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் கவலைக்குறியதாக உள்ளது, முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசிடம் பணம் இல்லை” என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், “யாரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பட்ஜெட் இல்லாததால், நாட்டில் யாரும் முதலீடு செய்யமாட்டார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.