செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (14:45 IST)

நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை - இல.கணேசன்

நடிகர் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை இல.கணேசன்

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்யிஒன் வீட்டில் நடந்த ஐடி ரெய்டை பற்றித்தான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருந்தது. விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதற்காக செக் தான் இந்த ஐடி ரெய்ட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மறுத்துள்ளார்.
 
இது குறித்து, ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
 
பாகிஸ்தான், பங்களதேஷ் பிரிவினையின் போது, பாதிக்கப்பட்ட இந்துகளுக்கு இந்த CAA சட்டத்தின் மூலம் பரிகாரம் செய்ய 70 ஆண்டுகளாக ஆகியுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் நாட்டு நன்மையை நினைக்காமல் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.