உலகம் முழுவதும் இலவசமாக தங்கலாம்: OYO நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு பரிசு
இந்தியாவிற்காக தங்கபதக்கம் பெற்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு உலகம் முழுவதும் இலவசமாக தங்கலாம் என்று நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு பரிசு அளித்துள்ள தகவல் வெளிவந்துள்ளது
சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே. அவருக்கு பரிசு மழை பெய்து வரும் நிலையில் தற்போது உலகம் முழுவதும் உள்ள ஓயோ ஆடம்பர விடுதியில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என அந்த நிறுவனத்தின் சிஇஓ சற்று முன் அறிவிப்பு செய்துள்ளார்
ஏற்கனவே தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ஓராண்டுக்கு இலவச விமான பயணத்தை இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் சோப்ராவுக்கு பரிசுகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது