திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (09:40 IST)

சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே பரிசு! – சிறப்பு ஜெர்சி அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பெருமை படுத்தும் விதமாக சிறப்பு ஜெர்சி வெளியிட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்தும் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் சுபேதார் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

இந்நிலையில் அவரை பாராட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளது. மேலும் அவரை சிறப்பிக்கும் வகையில் ”8758” என்ற எண்ணில் சிறப்பு ஜெர்சி உருவாக்கப்படும் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர பிசிசிஐ நிர்வாகமும் நீரஜ் சோப்ராவுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளது.