திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:06 IST)

ஒரே நாளில் 3 மில்லியன் ஃபாலோயர்கள்: நீரஜ் சோப்ரா இன்ஸ்டாகிராம் சாதனை!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வாங்கி கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா அபாரமாக விளையாடி தங்கம் வென்றார். இந்தியாவுக்கு 100 ஆண்டுகளுக்கு பின் தடகள பிரிவில் கிடைத்த முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீரைநீரஜ்  சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அறிந்து ஏராளமானோர் அவரை ஃபாலோ செய்து வந்தனர். பதக்கம் வெல்வதற்கு பின் முன் அவருக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில் பதக்கம் வென்ற ஒரே நாளில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை மூன்று மில்லியன் நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இன்ஸ்டாகிராம் நிர்வாகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது