திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 மே 2021 (09:20 IST)

கோவாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - இதுவரை 83 பேர் பலி!

கோவாவில் மீண்டும் ஆக்சிஜன் விநியோக அளவு குறைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில் கோவாவிலும் அப்படியான துயர சம்பவம் நடந்துள்ளது.
 
கோவாவின் பனாஜியில் அமைந்துள்ள கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஏற்கனவே அங்கு கடந்த 4 நாட்களில் 74 கொரோனா நோயாளிகள்  உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆக்சிஜன் விநியோக அளவு குறைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 83 ஆக அதிகரித்துள்ளது.