செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (08:02 IST)

பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பீகாரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர்
 
மேலும் இந்த கூட்டத்தில் சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,
 
Edited by Siva