வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (10:52 IST)

நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: என்ன காரணம்?

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் நாளை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாளை மறுநாள் பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதை தெரிந்ததே.
 
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூஏ கார்கே, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் எதிர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிகார் என்கிறார். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva