வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (16:18 IST)

மாமன்னன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

அரசியலில் இறங்கி அமைச்சர் ஆகிவிட்ட உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் நடந்தது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் பற்றி பேசியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக கமலுக்கு ஆதரவாக ஒரு குழுவினரும், மாரி செல்வராஜுக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் சமூகவலைதளங்களில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டியாக அமைந்துள்ள நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நீளம் 2 மணிநேரம் 35 நிமிடம் எனவும், முதல் பாதி 1 மணிநேரம் 15 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 20 நிமிடமாகவும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.