திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (13:59 IST)

ஆன்லைனில் மது விற்பனை: அரசின் அதிரடி திட்டத்தால் குடிமகன்கள் கொண்டாட்டம்

ஆன்லைனில் மது விற்பனை
தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தமிழக அமைச்சர் நேற்று அறிவித்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
தற்போது சுமார் 2544 உள்நாட்டு மதுபான கடைகளும் 1061 வெளிநாட்டு மதுபான கடைகளும் மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு மதுபானங்கள் மட்டும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்றும் வியாபாரத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்காக ஒவ்வொரு பாட்டிலிலும் பார்கோட் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
2019-20 ஆம் ஆண்டில் மதுபானங்களை விற்பனையை விட 25 சதவீதம் இந்த இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு ஆன்லைனில் மது விற்பனையும் ஒரு காரணமாக இருக்கும் என்று மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி, அதே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படும் என்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது