ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:32 IST)

மாயமாய் மறைந்துப் போன கழிவறைகள்.. கிராம மக்கள் புகார்

கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறந்தவெளியை கழிப்பதற்காக பயன்படுத்தும் அவலத்தை ஒழிக்க பாஜக அரசு ”தூய்மை இந்தியா” திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் 540 கோடி ரூபாய் மதிப்பில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கழிவறைகள் எங்கே என கண்டுபிடிக்கமுடியவில்லை என புகார் எழுந்துள்ளது. அரசாங்கப் பதிவுகளில் கிராமவாசிகளின் வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டதற்கான புகைப்படங்கள் உள்ளன. ஆனால் கிராமவாசிகள் தங்கள் பெயர்களில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என கூறுகின்றனர்.

இது குறித்து அம்மாநிலத்தின் ஸ்வச் பாரத் துணை இயக்குனரான அஜித் திவாரி “2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, கழிவறைகள் இல்லாத 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன் பின்பு 2018-ல் கழிவறைகள் கட்டப்பட்டன.

அந்த கழிவறைகள் 100% கட்டிமுடிக்கப்பட்டனவா என தன்னார்வலர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்திய போது, சுமார் 4.5 லட்சம் கழிப்பறைகளை காணவில்லை” என கூறியுள்ளார்.

540 கோடி ரூபாயில் பெரும் ஊழல் நடந்திருக்காலாம் எனவும் பலரால் கூறப்படுகிறது. மேலும் கழிப்பறை கட்டப்பட்டதற்கான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள், பக்கத்து வீடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம் எனவும் வியூகிக்கப்படுகிறது.