புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (14:05 IST)

”வேற சாதி பையனையா காதலிக்கிற?”- காதல் ஜோடியை கிராம மக்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவில் சாதி விட்டு சாதி காதலித்த இளம் ஜோடிகளை அந்த பகுதி கிராம மக்கள் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் உள்ள மாண்டுவா கிராமத்தில் ஒரு இளம் பெண்ணும், ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 22-ம் தேதி அந்த பெண்ணை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் அந்த இளைஞர்.

அவரை வழிமறித்த சிலர் அவர் யார் என்னவென்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர் வேறு சாதி என்பதோடு இருவரும் காதலிக்கும் விவகாரம் தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த இளைஞரை அடித்து உதைத்த அந்த கும்பல், காதலித்த பெண்ணையும் நடுரோட்டுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். இருவரையும் நடுரோட்டில் பலர் பார்க்க மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

அவமானமடைந்த காதல் ஜோடி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த காவல் துறை இதுவரை 22 பேர் மேல் வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதிரீதியாக இளம்ஜோடிகளை துன்புறுத்திய விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.