புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (13:09 IST)

இளம்பெண்ணை இரக்கமின்றி அடிக்கும் கொடூரன் – அதிர்ச்சி வீடியோ

அலுவலகம் ஒன்றில் இளம்பெண் ஒருவரை இரக்கமின்றி ஒருவர் அடித்து உதைப்பதை இன்னொருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பெண் நவ நாகரீகமாக உடையணிந்து இருக்கிறார். அவரை அடிக்கும் இடம் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் போல தெரிகிறது. முதலில் கன்னத்தில் குத்திய அந்த நபர், பிறகு கால் முடியால் பெண்ணின் முகத்தில் ஓங்கி பலமுறை குத்துகிறார். வலி தாங்க முடியாத பெண் கைகளை கூப்பி விட்டுவிடுமாறு சைகை செய்கிறார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத அந்த நபர், நடக்கமுடியாமல் தரையில் ஊர்ந்து செல்லும் பெண்ணை மீண்டும் சரமாரியாக முதுகிலேயே குத்துகிறார். மூச்சு திணறி கிடக்கும் பெண்ணை பின்பக்க கழுத்தில் சரமாரியாக தாக்குகிறார். அதற்கு பின் அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என தெரியவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் இந்த சம்பவம் எங்கே நடந்தது என தெரியவில்லை. எங்கு நடந்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என பதிவிட்டுள்ளனர். தாக்குபவர்கள் ஹிந்தியில் பேசிக்கொள்வதால் இது இந்தியாவின் வட மாநிலங்களில் ஏதோ ஒரு பகுதியில் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.