புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (12:34 IST)

ஜார்கண்டில் பள்ளதாக்கில் கவிழ்ந்த பேருந்து:6 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம், கர்வா பகுதியில் பயணித்து கொண்டிருந்த பேருந்து ஆழமான பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சட்டீஸ்கரிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் கர்வா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளதாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜார்கண்டின் கர்வா பகுதிக்கு அருகே நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த விபத்தை குறித்து ஜார்கெண்ட் மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.