வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (09:33 IST)

மக்களவை-சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர்

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடக்கும்போது அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ' தேர்தல் ஆணையத்தில் உள்ள 440 அலுவலர்களை வைத்துக் கொண்டு சுமார் ஒரு கோடியே 11 லட்சம் பேரை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு 14 மாதங்கள் முன்பே பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் பணிகளுடன் சட்டப்பேரவை தேர்தல் பணிகளையும் தொடங்குவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
 
மேலும் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வராமல், ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கா பொகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்